‘தீபாவளி சிறப்பு பேருந்துகள்’.. எந்தெந்த ஊர்காரங்க எங்கிருந்த பஸ் ஏறணும்..? விவரம் உள்ளே..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தீபாவளி பண்டிக்கைக்காக அக்டோபர் 24, 25, 26 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் எந்ததெந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து செல்லவேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையம்:
மயிலாடுதுறை, நாகை, வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், செங்கோட்டை, நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோவை, ராமநாதபுரம், எர்ணாகுளம், பெங்களூரு.
மாதவரம் பேருந்து நிலையம்:
ஆந்திராவுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும்.
கே.கே.நகர் பேருந்து நிலையம்:
ஈ.சி.ஆர் வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.
தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையம்:
விக்கிரவாணடி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்.
பூவிருந்தமல்லி பேருந்து நிலையம்:
ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மற்றும் ஓசூர் செல்லும் பேருந்துகள்.