“மாண்புமிகு நீதிபதிகள்.. காவலர் ரேவதி... நம்பிக்கை தந்துருக்கீங்க!”... 2 வருஷத்துக்கு பின், சாத்தான்குளம் விவகாரத்தில் வெற்றிமாறன் ட்வீட் !

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முன்னதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில், போலீஸ் விசாரணை பற்றிய விசாரணை படத்தை இயக்கிய அனுபவத்துடன் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “வரம்புமீறிய அதிகாரம் ஒரு இடத்தில் இருக்கும்போதும் அவங்க தங்களைக் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவங்களாக நினைத்துக் கொள்கிறார்களோ என தோன்றுகிறது. எங்க இருந்து இந்த துணிச்சலும் தைரியமும் வந்துச்சுனு தெரியல.

“மாண்புமிகு நீதிபதிகள்.. காவலர் ரேவதி... நம்பிக்கை தந்துருக்கீங்க!”... 2 வருஷத்துக்கு பின், சாத்தான்குளம் விவகாரத்தில் வெற்றிமாறன் ட்வீட் !

ஒரு சின்ன விஷயத்துக்காக தொடர்ந்து 4, 5 மணி நேரம் அடிச்சிருக்காங்க. யாரும் கேள்வி கேக்க மாட்ருக்காங்க என்கிற துணிச்சல் அவங்களுக்கு இருந்துருக்கு. அவங்க சரியாதான் இருந்துருக்காங்க. அவங்கள அரசு உட்பட யாரும் கேள்வி கேக்கல. முதல் தகவல் அறிக்கை கூட பதியாமல் இருக்கு. காவலர்களுடன் தொடர்புடைய மருத்துவர்கள் என அனைவருமே இதில் கேள்விக்கு ஆட்படுத்தப்பட வேண்டியவர்கள். இந்த நேரத்தில் அவர்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவதுதான் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.

ஒரு தந்தையும் மகனும் எப்படி கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என கிராபிக்ஸாகக்கூட வந்துவிட்டது. மூர்க்கத்தனமாக எந்த ஒரு கேள்வியையும் கேட்க முடியாத அளவுக்கு அவர்கள் தங்களை நினைத்துக் கொண்டிருந்தால் இப்படி நடந்துகொண்டிருப்பார்கள். காலம் தாழ்த்தாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க நினைக்கும் அத்தனை மக்களும் பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் நிற்கிறோம் என்பதை பதிவு செய்கிறேன்” என்று பேசியிருந்தார்.

இந்நிலையில், இன்று, 2  வருடங்களாக ட்வீட் பதிவிடாத வெற்றிமாறன் தனது ட்விட்டரில்,  “ நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி, மாஜிஸ்திரேட் பாரதிதாசன், தலைமை காவலர் ரேவதி ஆகிய நீங்கள் எங்களுக்கு

நம்பிக்கை அளித்துள்ளீர்கள். நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்