நடிகர் ராமதாஸ் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய வெற்றிமாறன்.. அழுத மகனின் கையை பிடித்து தேற்றி ஆறுதல்! உருக்கமான வீடியோ

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகர் ஈ. ராமதாஸ் மறைவுக்கு இயக்குனர் வெற்றிமாறன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார்.

நடிகர் ராமதாஸ் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய வெற்றிமாறன்.. அழுத மகனின் கையை பிடித்து தேற்றி ஆறுதல்! உருக்கமான வீடியோ

Also Read | துணிவு படத்தின் வெற்றி.. சொந்த ஊரில் இயக்குனர் வினோத் தந்தையை கௌரவித்த பிரபல தியேட்டர்!

விழுப்புரத்தைச் சேர்ந்த நடிகர் ராமதாஸ், ராஜா ராஜா தான், இராவணன், சுயம்வரம், ஆயிரம் பூக்கள் மலரட்டும், வாழ்க ஜனநாயகம், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு போன்ற திரைப்படங்களை இயக்கியவர்.

ராமதாஸ், வசூல் ராஜா MBBS, காக்கிச் சட்டை, விசாரணை, அறம், விக்ரம் வேதா, மாரி 2, மெட்ரோ உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்.

Director Vetrimaaran attend actor Ramadoss funeral

நடிகர் ராமதாஸ் மறைவுக்கு திரையுலகினர்  அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் திரையுலகப் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் பேரரசு, மனோபாலா, மனோஜ் பாரதிராஜா ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

Director Vetrimaaran attend actor Ramadoss funeral

இயக்குனர் வெற்றிமாறன், கே.கே. நகரில் உள்ள ராமதாஸ் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அங்கு ராமதாஸ் மனைவி & மகன் கலைச் செல்வனின் கைகளை பிடித்து தேற்றி வெற்றிமாறன் ஆறுதல் கூறினார். இயக்குனர் சுப்ரமணிய சிவாவும் வெற்றிமாறனுடன் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Also Read | அதிர்ச்சி.! பிரபல தமிழ் நடிகர் & இயக்குனர் ராமதாஸ் மாரடைப்பால் மரணம்..

VETRIMAARAN, RAMADOSS, RAMADOSS FUNERAL

மற்ற செய்திகள்