“பொன்னியின் செல்வன் 2 வர்ற நேரத்துல..” - அமரர் கல்கியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை வெளியிட்டு இயக்குநர் மணிரத்னம் பேச்சு.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொன்னியின் செல்வன் படைத்த அமரர் கல்கி தமிழின் சிறந்த எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், கலை விமர்சகர், பாடலாசிரியர்.

“பொன்னியின் செல்வன் 2 வர்ற நேரத்துல..” - அமரர் கல்கியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை வெளியிட்டு இயக்குநர் மணிரத்னம் பேச்சு.!

Images are subject to © copyright to their respective owners.

Also Read | பிரதமரை சந்தித்த KGF யாஷ் & ‘காந்தாரா’ இயக்குநர்..! வைரலாகும் ஃபோட்டோஸ்..

இவை அனைத்துக்கும் மேலாக ஆழ்ந்த தேச பக்தர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று மும்முறை சிறை சென்றவர்.  அவரது எழுத்துக்களைப் போலவே வாழ்க்கையும், மிகவும் சுவாரசியமானது.  “கல்கி:பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் பத்திரிகையாளர் எஸ். சந்திர மௌலி எழுதியுள்ள அமரர் கல்கியின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் மணிரத்னம் இன்று (13 பிப்ரவரி 2023)  வெளியிட்டார். 

இந்த புத்தகத்தின் முதல் பிரதிகளை அமரர் கல்கியின் பேத்திகளான சீதா ரவி, லட்சுமி நடராஜன் இருவரும் பெற்றுக் கொண்டனர்.  இந்த புத்தகத்தை வெளியிடுகையில், “அமரர் கல்கியின் எழுத்துக்கள் தலைமுறைகள் தாண்டி ரசிக்கப்படுவது அவரது எழுத்தின் ஈர்ப்புக்கு சாட்சி. பொன்னியின் செல்வன்  திரைப்படத்தின் முதல் பாகம் பெரும் வரவேற்பினைப் பெற்று, இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது வாழ்க்கை வரலாறு வெளியிடப்படுவது மிகவும் பொருத்தமானது” என்று  இயக்குனர் மணிரத்னம் குறிப்பிட்டார்.

Director Maniratnam launched Kalki: Ponniyin Selvar Bio book

Images are subject to © copyright to their respective owners.

இதுகுறித்து அமரர் கல்கியின் பேத்தியான சீதா ரவி,  “பொன்னியின் செல்வனை எழுத்தில் படித்து, திரையில் பார்த்து ரசித்த இன்றைய இன்ஸ்டாகிராம் தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில்  அவரது ஆளுமையைப் பற்றி மிகவும் விறுவிறுப்பாக இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

220 பக்கங்கள் கொண்ட “கல்கி: பொன்னியின் செல்வர்” புத்தகத்தின் விலை ரூ.225/- வெளியீடு: கலைஞன் பதிப்பகம், 9 சாரங்கபாணி தெரு, தி நகர், சென்னை 600017. தொலைபேசி: 044-28340488.

Also Read | “ஒருவரின் ஹிஸ்டரிய பார்த்தெல்லாம் நடிக்க முடியாது” - மோகன் ஜி படம் குறித்து செல்வராகவன்.!

MANIRATNAM, KALKI: PONNIYIN SELVAR, PS2, PONNIYIN SELVAN

மற்ற செய்திகள்