டவுட்டா இருக்கே...! 'ஷட்டர் வேற ஓப்பன்...' 'திருடி முடியுறதுக்குள்ள போலீஸ் என்ட்ரி... ' 'உள்ள இருந்தது கடப்பாரை திருடர்...' - காத்திருந்த அதிர்ச்சி தகவல்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திண்டுக்கல்லில் கடப்பாரை திருடன் எனக் கூறப்படும் கொள்ளையர் ஒருவர் மருந்துக் கடையில் திருடிக்கொண்டிருக்கும் போதே போலீசாரிடம் பிடிபட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல்நிலைய பகுதியில் உள்ள வத்தலக்குண்டு - மதுரை சாலையில் ரோந்து சென்ற போலீசார், அப்பகுதியில் இயங்கும் ஒரு சூப்பர் மெடிக்கல் ஷாப்பை கண்டு சந்தேகம் அடைந்துள்ளனர். சந்தேகத்தின் பெயரில் மருந்துக்கடைக்குள் சென்ற போலீசார், அங்கு ஒருவர் உள்ளேயிருந்து வெளியே ஓடியுள்ளார். ஓடிய நபரை பிடித்த போலீசாருக்கு பல அதிர்ச்சிகர தகவல்களை கூறியுள்ளார் அந்த திருடர்.
கடப்பாரை திருடன் என்ற அடைப்பெயர் கொண்ட அவர் பெயர் லெட்சுமணன் (வயது 43) எனவும் அவரின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எனவும் கூறியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தான் இதே போல் ஒரு திருட்டில் ஈடுபட்டு 4 நாட்களுக்கு முன் தான் புதுக்கோட்டை சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
மேலும் கடந்த 17-ஆம் தேதி மாலை தலைவலிக்காக சூப்பர் மெடிக்கல் ஷாப்பிற்கு வந்த லெட்சுமணன் அப்போது கடையின் உரிமையாளர் கட்டுக்கட்டாக பணம் எண்ணுவதை பார்த்து தான் கொள்ளையடிக்க வந்ததாக தெரிவித்துள்ளார்.
அதனால் தான் ஷட்டரை உடைத்து கடையில் இருந்த ரூ 37 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றுள்ளார். அப்போதுதான் உங்களிடம் சிக்கினேன் எனவும் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.
மேலும் லெட்சுமணன் பற்றி மேலும் தகவல்கள் சேகரித்த நிலக்கோட்டை போலீசார், லெட்சுமணன் மீது தமிழகம் முழுக்க 53 திருட்டு வழக்குகள் உள்ளதாகவும், சிறைக்கு சென்ற பின் ஜாமின் பெற்று தலைமறைவாக இருந்து, அடுத்த திருட்டுக்கு தயாராவதையும் சுழற்சியாக செய்துள்ளார். மேலும், கடப்பாறையை வைத்து பூட்டை லாவகமாக உடைத்து திருடுவதால் தான் இவருக்கு கடப்பாரை திருடன் என்ற பெயரும் வந்துள்ளதாகவும், லெட்சுமணனுக்கு அறந்தாங்கியில் 10-ம் வகுப்பு படிக்கும் மகள் மற்றும் மனைவி உள்ளனர் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்