'சென்னைக்கு போய்ட்டு தான் வரோம்'... 'கொரோனா டெஸ்ட்க்கு வர முடியாது'...'பதறி போன பொதுமக்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பழுதாகி நடுரோட்டில் நின்ற ஆட்டோவில் பிரான்சு நாட்டை சேர்ந்த தம்பதி இருந்த நிலையில், அவர்கள் கொரோனா பரிசோதனைக்கு வர மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் பகுதியில் பிரான்சு நாட்டை சேர்ந்த தம்பதியர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென அவர்கள் சென்ற ஆட்டோ பழுதாகி சாலையில் நின்றது. அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஆட்டோவில் வெளிநாட்டினர் இருப்பதை பார்த்து பதறி போய் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்கள்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிரான்சு நாட்டை சேர்ந்த தம்பதியரிடம் விசாரணை மேற்கொண்டார்கள். அதில், ''இந்த தம்பதி பிரான்சு நாட்டில் இருந்து கொடைக்கானல் வந்துள்ளார்கள். இதையடுத்து அங்கு ஒரு ஆட்டோவை விலைக்கு வாங்கி அங்கிருந்து சென்னைக்கு சென்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து இருவரையும் காவல்துறையினர் கொரோனா பரிசோதனைக்காக அழைத்தனர். ஆனால் நாங்கள் ஏற்கனவே 6 முறை சோதனை செய்யப்பட்டு விட்டதாகவும் இனிமேல் சோதனை செய்ய முடியாது எனவும் மறுத்து விட்டார்கள்.
இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் இடையே பதற்றம் நிலவியது. 144 தடை உத்தரவு இருக்கும் போது இவர்கள் எப்படி ஆட்டோவில் வலம் வருகிறார்கள் என பரபரப்பு நிலவியது.