'அட...! இது செம ஐடியாவே இருக்கே...' 'ATM-ல பால் விநியோகம்...' 'நோ பிளாஸ்டிக், நோ கலப்படம்...' - சாதித்து காட்டிய ராணுவ வீரர்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திண்டுக்கல் மாவட்டத்தில் 10 ரூபாய்க்கு பால் வரும் ஏடிஎம் இயந்திரத்தை உருவாக்கி அசத்தியுள்ளார் முன்னாள் ராணுவ வீரர்.

'அட...! இது செம ஐடியாவே இருக்கே...' 'ATM-ல பால் விநியோகம்...' 'நோ பிளாஸ்டிக், நோ கலப்படம்...' - சாதித்து காட்டிய ராணுவ வீரர்...!

திண்டுக்கல்லை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் போடி சாமி ராணுவ சேவை முடிந்து ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

தற்போது கொரோனா ஊரடங்கால் தன் வேலையை இழந்த போடி சாமி வீட்டில் நேரம் கழிக்காமல் சொந்தமாக தொழில் தொடங்க எண்ணினார். மேலும் அவர் நாட்டுமாடு பால்பண்ணையையும் உருவாக்கினார்.

மேலும் தான் இதற்கு முன் வேலை பார்த்த ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வருவது போல் நாம் விற்கும் பாலும் 24 மணி நேரமும் வர வேண்டும் எண்ணிய போடி சாமி நீண்ட கால முயற்சிக்கு பின், பால் ஏடிஎம்-ஐ தொடங்கியுள்ளார்.

அவரின் அயராத முயற்சியால் திண்டுக்கல் நாயக்கர் புதுத்தெரு, கோவிந்தாபுரம் பகுதிகளில் இவரது ஏடிஎம் பால் பண்ணை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 10 ரூபாய் ஏடிஎம் இயந்திரத்தில் போட்டால் அதற்கேற்றவாறு பால் நம் பாத்திரத்தில் நிரம்புமாறு தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளார்.

மேலும் இதற்கென சிறப்பு ஏடிஎம் கார்டையும் வெளியிட்டுள்ளார். இவரின் இந்த வித்யாசமான புது முயற்சியை பார்த்த அப்பகுதி மக்கள் வியப்புற்று வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ஏடிஎம் பால் பண்ணை குறித்து போடிசாமி கூறும்போது, 'பொதுவாக நாம் அனைவரும் தினமும் பால் பாக்கெட் வாங்குவது வழக்கம். பிளாஸ்டிக் பால் பாக்கெட்களை தவிர்க்கவும், நல்ல சத்தான சுகாதாரமான பாலை 24 மணிநேரமும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஏடிஎம் பால் பண்ணையை தொடங்கியுள்ளேன்' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்