பெரும் சோகம்! தமிழ்நாட்டில் மேலும் ஒரு தேர் விபத்து.. தர்மபுரி காளியம்மன் கோயில் சப்பரம் கவிழ்ந்து உயிர் சேதம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
Also Read | “இனி இந்த மாதிரி விளம்பரங்களை ஒளிபரப்ப கூடாது”..! மத்திய அரசு போட்ட பரபரப்பு உத்தரவு!
தமிழகத்தில் வைகாசி மாதத்தில் தொடர்ச்சியாக நிறைய ஊர்களில் தேர் திருவிழா அல்லது தேர் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் தஞ்சாவூர் பகுதியில் நடந்த தேர் திருவிழாவில் திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக நடந்த உயிரிழப்புக்கள் மற்றும் சேதங்கள் தமிழகத்தை உலுக்கியதுடன் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சுவடு மறைவதற்குள் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே நடந்திருக்கும் தேர் விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் மேலும் அதிர்ச்சியையும் சோகத்தையும் அப்பகுதியில் ஏற்படுத்தியிருக்கின்றன.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே தேர்த்திருவிழா உற்சவம் இன்று நடந்தது. சிறிய தேர்தான் என்றாலும் இந்தத் தேரை மக்கள் ஒன்று கூடி வடம்பிடித்து வயல்வெளி அருகே இழுத்துச் சென்று கொண்டிருந்தபோது தேரின் அச்சாணி திடீரென எதிர்பாராத விதமாக முறிந்ததாகவும், இதனால் நிலைகுலைந்து தேர் கவிழ்ந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது இந்த தேரைச் சுற்றி இருந்த நபர்கள் சிலர் படுகாயமுற்றதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அவர்கள் கொண்டு செல்லப்பட்டபோது, அவர்களுள் 2 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தேர் அச்சாணி முறிந்து தேர் குடம் சாயும்போது இந்த விபத்தில் நிகழ்ந்ததாகவும், இதில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்துவிட்டதாகவும் கூறப்பட்டுவருகிறது.
Also Read | ஆழ்துளையில் 10 வயது சிறுவன்.. வாளியில் நீரை நிரப்பி அனுப்பும் ஆச்சர்யம்!.. 55 மணி நேர போராட்டம்..!
மற்ற செய்திகள்