இவ்வளவு 'ரூபாய்' நோட்டா...? 'குவிஞ்சு கெடக்கு...' எடுத்து 'எண்ணுறதுக்கே' ஒருநாள் ஆயிடுமே...! - கடைசியில காத்திருந்த 'அதிரடி' டிவிஸ்ட்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தருமபுரி அருகே இருக்கும் ரயில் நிலையத்தில் 500, 2000 ரூபாய் நோட்டுக்கள் ரயில் பாதையருகே கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வளவு 'ரூபாய்' நோட்டா...? 'குவிஞ்சு கெடக்கு...' எடுத்து 'எண்ணுறதுக்கே' ஒருநாள் ஆயிடுமே...! - கடைசியில காத்திருந்த 'அதிரடி' டிவிஸ்ட்...!

சேலம் - பெங்களூரு ரயில் பாதையில் சேலம் மாவட்டம் காருவள்ளி ரயில் நிலையத்திற்கும், தருமபுரி மாவட்டம் தொப்பூர் ரயில் நிலையத்துக்கும் இடையே குண்டுக்கல் ரயில் பாதையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும்   'கீ மேன்' எப்போதும் போல் இன்றும் (24.08.2021) ரயில் பாதையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ரயில் பாதை ஓரம் ரூ.2000 மற்றும் ரூ.500 மதிப்பிலான ரூபாய் நோட்டுகள்  கீழே கிடந்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த கீ மேன் தொப்பூர் ரயில் நிலையத்துக்குத் தகவல் அளித்துள்ளார்.

தகவலறிந்து வந்த தீவட்டிப்பட்டி போலீசார் மற்றும் தருமபுரி ரயில் நிலைய போலீசார் நடத்திய ஆய்வில் கீழே கிடந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் குழந்தைகள் விளையாடப் பயன்படுத்தும் பொம்மை ரூபாய் நோட்டுகள் என உறுதியளிக்கப்பட்டது. 

கீழே கடந்த நோட்டுக்களை கைப்பற்றிய போலீசார் இவை ரயிலில் பயணித்தவர்களின் குழந்தைகள் தவறவிட்டனரா அல்லது சினிமா, தொலைக்காட்சி படப்பிடிப்பில் பயன்படுத்தபட்டதா என்ற ரீதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மற்ற செய்திகள்