"என்னோட இடத்துல மலம் கழிக்குறியா"??... ஒழுங்கு மரியாதையா 'கை'யில அள்ளி கொண்டு போ... சிறுவனை 'மலம்' அள்ள வைத்த 'கொடுமை'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள கோடாராம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. பட்டியலினத்தவரான இவரது மகன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் அந்த சிறுவன், இயற்கை உபாதையை கழிக்க வேண்டி தனது வீட்டின் அருகேயுள்ள விவசாய நிலம் ஒன்றின் முட்புதருக்கு சென்றுள்ளார். அந்த நிலப்பகுதி, உயர்ந்த சமூகத்தினரை சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கு சொந்தமானது என தெரிகிறது. அப்போது அங்கு வந்த ராஜசேகர், அந்த சிறுவனின் சாதி பெயரை சொல்லி அசிங்கமாக திட்டியுள்ளார்.
தொடர்ந்து, மூங்கில் கம்பை கொண்டு சிறுவனை தாக்கிய நிலையில், மலத்தை கையால் வாரிக் கொண்டு வேறு இடத்தில் கொண்டு வீசு எனவும் மிரட்டியுள்ளார். அடிக்கு பயந்த சிறுவன், மலத்தை தனது கையால் அள்ளி வேறு இடத்தில் கொண்டு கொட்டியுள்ளான். இதனை அறிந்த சிறுவனின் பெற்றோர்கள் மகனுக்கு நேர்ந்தது தொடர்பாக, போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து, ராஜசேகர் மீது எஸ்.சி, எஸ்.டி க்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக, மலம் அள்ளி வீசிவிட்டு வீட்டிற்கு சென்ற சிறுவன், கடும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்ததாகவும், அவனது கைகளை நாங்கள் சுத்தம் செய்து விட்ட போதும், அந்த கைகளை கொண்டு எதுவும் உண்ணாமல் சிறுவன் உட்கார்ந்து இருந்ததாகவும் பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நிலத்தில் மலம் கழித்த சிறுவனை மிரட்டி அவனைக் கொண்டே மலம் அள்ள வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS