'உன்ன பாக்கணும், மாங்காய் மண்டிக்கு வா...' 'சடலமாக கிடந்த இளைஞர்...' 'விசாரணையில் திடீர் திருப்பம்...' - கொலையாளி யார் என கண்டுபிடித்த போலீசார்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தர்மபுரியை சேர்ந்த இளைஞர் மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள ஒட்டர்திண்ணை கிராமத்தில் வசித்து வரும் விஜய் என்பவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பொறியியல் படித்த வந்த மாணவி ராஜேஸ்வரியை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
மகளின் திருமணத்தை மறுத்த பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் விஜய் என்பவர் தீடீரென விபத்தில் அடிபட்டு இறந்துள்ளதாக செய்திகள் பரவியது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் பல கோணங்களில் விசாரித்து, விஜய்யின் மாமனார் மற்றும் பெண் வீட்டு உறவினர்கள் என 6 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் தற்போது விஜய் கொலை செய்யப்பட்டார் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெண்ணின் தந்தை முனிராஜ் என்பவர் தனது மருமகன் விஜயை கடந்த 1-ஆம் தேதி தனக்கு சொந்தமான மாங்காய் மண்டிக்கு வருமாறு அழைத்துள்ளார். தன் மாமனார் சமாதானம் பேசத்தான் அழைக்கிறார் என்று நம்பிய விஜய்யும் மாங்காய் மண்டிக்கு சென்றுள்ளார்.
அப்போது பெண் வீட்டாரை சேர்ந்த சிலர் ஒன்று சேர்ந்து விஜய்யை இருப்பு கம்பியால் அடித்துள்ளனர். மேலும் மாமனார் முனிராஜ், அவரது உறவினர்கள் வீரமணி, சித்துராஜ், மஹாலிங்கம் ஆகியோர் விஜயின் சடலத்தை எடுத்து செல்லும் காட்சிகள் பெட்ரோல் பங்க் ஒன்றில் பதிவான சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. சரக்கு வாகனத்தில் உடலை மறைத்து, அதன் மீது தக்காளி பெட்டிகளை அடுக்கி எடுத்து சென்று சடலத்தை வீசி உள்ளனர் இந்நிலையில் முனிராஜ் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.
தன் மகள் 12-ம் வகுப்பு படித்த ஏழை வீட்டை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்ததால், பெண் வீட்டார் செய்த இந்த கொடுஞ்செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்