‘தொட்டிலில் தூங்கிய குழந்தை’.. ‘சடலமாக கிடந்த அதிர்ச்சி’.. பிரேத பரிசோதனையில் வெளியான பகீர் காரணம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தர்மபுரி அருகே உணவுக் குழாயில் சிக்கன் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள உம்மியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு அன்னப்பூரணி (6), தனுஸ்ரீ (2) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். லாரி டிரைவராக வேலை செய்யும் சின்னத்துரை இரவு வேலை முடிந்து வீடு திரும்பியுள்ளார். பின்னர் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளனர்.
இரண்டாவது குழந்தை தனுஸ்ரீ தொட்டிலில் தூங்க வைத்துள்ளனர். காலை வெகுநேரமாகியும் குழந்தை விழிக்காததால் தொட்டிலைப் பார்த்துள்ளனர். ஆனால் குழந்தை எந்த அசைவின்றியும் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனிடையே வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் உணவுக் குழாயில் சிக்கன் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து பெற்றோரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இரவு அனைவரும் சிக்கன் சாப்பிட்டது தெரியவந்துள்ளது. உணவு குழாயில் சிக்கன் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.