"நான் எதார்த்தமாதான் கேட்டேன்.. அப்றம் GP முத்து அண்ணா ஒருவிதமா கேட்கப்போய்".. நடந்ததை உடைக்கும் தனா..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழில் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன், மிக வெற்றிகரமான சீசனாகவும் அமைந்திருந்தது.

"நான் எதார்த்தமாதான் கேட்டேன்.. அப்றம் GP முத்து அண்ணா ஒருவிதமா கேட்கப்போய்".. நடந்ததை உடைக்கும் தனா..!

                           Images are subject to © copyright to their respective owners

இதற்கு காரணம் போட்டியாளர்களாக களமிறங்கி இருந்த 21 பேரும் மிகச் சிறப்பாக பிக் பாஸ் வீட்டிற்குள் வலம் வந்திருந்தனர்.

அதிலும் குறிப்பாக அதிக பிரபலம் இல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த தனலட்சுமி, முதல் நாள் முதலே மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தார். ஃபினாலே வரை அவர் முன்னேறுவார் என பலரும் குறிப்பிட்டு வந்த சூழலில் நிகழ்ச்சியின் பாதியிலேயே அவர் வெளியேறி இருந்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. ஆனால் அதே வேளையில், பாதியில் வெளியே வந்த தனலட்சுமிக்கு மக்கள் மிகுந்த ஆதரவையும் அளித்திருந்தனர். மக்கள் செல்வி என்று தனலட்சுமியை குறிப்பிட்டு ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர்.

இந்த நிலையில், பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்காக "மக்களுடன் தனா" என்ற பிரத்யேக நிகழ்ச்சி ஒன்றிலும் தனலட்சுமி கலந்து கொண்டிருந்தார். அப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்தது பற்றி பல்வேறு விஷயங்களை தனலட்சுமி பகிர்ந்து கொண்டார்.

இதனிடையே, பிக் பாஸ் வீட்டின் தொடக்கத்தில் மகேஸ்வரியுடன் தனலட்சுமி சாப்பாடு விஷயத்தில் விவாதம் உருவானது தொடர்பான விஷயம் அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது. அந்த சமயத்தில் மட்டுமில்லாமல், பிக் பாஸ் வீட்டில் நிறைய இடங்களில் தனலட்சுமி Attitude -டன் முகத்தை காட்டியது பற்றியும் கேள்வி எழுப்பப்பட இதற்கு பதில் அளித்தவர், "என்னோட முகமே அப்படித்தான். ஒரு மாதிரி டெரரா முறைக்கிற மாதிரி தான் இருக்கும். பேசி பாத்தா தான் தெரியும் நான் லூசுங்குறது.

Dhanalakshmi opens up about her exrpessions in bigg boss

எனக்கு என்னன்னா நான் என் மனசுல என்ன நினைக்கிறேனோ அது எனக்கு ரியாக்ஷனா மூஞ்சில தெரியும். கமல் சார் எபிசோட்ல கூட நான் அப்படி உட்கார்ந்து இருக்குறதை நீங்க கவனிச்சுருப்பீங்க. அதே மாதிரி அவங்க சமைச்சிட்டு இருக்கும்போது நான் எதார்த்தமா கேட்டது தான். நைட் சாப்பாடை மதியானம் சீக்கிரமா முடிச்சு வைக்கிறாங்கன்னு எதார்த்தமா நான் கேட்டப்போ, ஜிபி முத்து அண்ணா ஒரு விதமா கேட்டு அது ஒரு பிரச்சனையா போயிடுச்சு.

என்கிட்ட சண்டை போட்டாங்கன்னா அவங்க மூஞ்ச பாத்தே நான் தெரிஞ்சுப்பேன் அவங்க நம்ம கிட்ட பேசுவாங்களா, இல்லயான்னு. அந்த மாதிரி தான் நான் யோசிச்சு மகேஸ்வரிகிட்ட பேசாம இருந்திருப்பேன்னு நினைக்கிறேன். அடுத்த நாள் அவங்களா வந்து என்கிட்ட நல்லா பேசினாங்க. நானா போய் பேசி என்னை நானே வேதனைப்படுத்துகிறது எனக்கு பிடிக்காது" என தெரிவித்தார்.

DHANALAKSHMI, GP MUTHU, BIGG BOSS

மற்ற செய்திகள்