"பக்தர்கள் மீது தாக்குதல்"... "டோல்கேட் ஊழியர்கள் கைது"... "நடந்தது என்ன?"...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சுங்கச்சாவடியில் ஃபாஸ்டேக் வழியாக நுழைந்த வாகனத்துக்கு இரட்டிப்பு கட்டணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறில், ஐயப்பசாமி பக்தர்களை சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"பக்தர்கள் மீது தாக்குதல்"... "டோல்கேட் ஊழியர்கள் கைது"... "நடந்தது என்ன?"...

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி வழியாக ஐயப்ப பக்தர்கள் வேன் ஒன்று வந்துள்ளது. வாகன நெரிசல் அதிகமாக இருந்த காரணத்தால், வேன் ஓட்டுனர் ஃபாஸ்டேக் பாதையில் வந்துள்ளார். வாகன நெரிசலைத் தவிர்ப்பதற்காக ஃபாஸ்டேக் பாதையைப் பயன்படுத்தியதால், இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து இருதரப்பினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சுங்கச்சாவடி ஊழியர்களால் ஐயப்ப பக்தர்கள் 3 பேர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். தங்கள் மீது தாக்குதல் நடத்திய சுங்கச்சாவடி ஊழியர்களைக் கைது செய்யக்கோரி, ஐயப்ப பக்தர்கள் மதுரை திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து தாக்குதல் சம்பவம் குறித்து விசாரிக்க திருமங்கலம் காவல் நிலைய போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

MADURAI, TOLLGATE, DEVOTEES, CLASH