"150 நாட்களுக்கும் மேல் திறக்கப்படாத தியேட்டர்கள்".. ஆனாலும் நடந்த ஆச்சர்யம்..! கெத்து காட்டிய ‘மல்டிப்ளக்ஸ்’ தியேட்டர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த போதிலும் , இந்த 3 மாதங்களில் பி.வி.ஆர், ஐநாக்ஸ் தியேட்டர்களின் பங்குகள் 80% உயர்ந்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தனி நபர் வருமானம் தொடங்கி, பல்வேறு துறைகளிலும் , நிறுவனங்களிலும் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், 150 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இதனிடையே சினிமா மற்றும் திரைபடத் தொழிலாளர் நலனைக் கருத்தில் கொண்டு, திரைப்பட படப்பிடிப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த சூழலிலும் இந்தியாவின் மிகப்பெரிய மல்டிப்ளக்ஸ் ஆபரேட்டர்களான பிவி ஆர் மற்றும் ஐநாக்ஸ் லீஷர் ஆகியவற்றின் பங்குகள் 80 % உயர்ந்துள்ளது.
மற்ற செய்திகள்