"3 வயசு குழந்தைய விட்டுட்டு போய்டீங்களே!".. மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏறி... மனைவியைப் பிரிந்து வாழ்ந்தவர்... இதயத்தை ரணமாக்கும் கோரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராணிபேட்டை மாவட்டம் கலவையில் மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்தவர் மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிபேட்டை மாவட்டம் கலவையில் கலவைபுத்தூர் ரோட்டை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 42). இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர், சென்னை புறநகர் பகுதியான மதுரவாயலில் மனைவி முத்துலட்சுமி மற்றும் 3 வயது குழந்தையோடு வசித்து வந்தார். அவருக்கும், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
ஜீவானந்தம் 2 ஆண்டாக தனியாக வாழ்ந்து வந்தார். அதில் ஒருசில மாதமாக திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமத்தில் தங்கியிருந்தார். பின்னர் அவரின் தந்தை தான் செய்யும் தொழிலுக்கு உதவியாக அவரை வீட்டிலேயே இருக்கும்படி கூறி அழைத்து வந்தார். இதற்கிடையே, நேற்று அதிகாலை 5 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் மீது ஏறி ஜீவானந்தம் தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கலவை போலீசாரும், தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து மின்சார டிரான்ஸ்பார்மரில் பிணமாக தொங்கிய ஜீவானந்தத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கலவை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்




