தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சகோதரருக்கு கொரோனா தொற்று உறுதி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் ராஜாவிற்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டதையடுத்து அவர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சகோதரருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழக துணை முதல்வரும், அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் உடன்பிறந்த சகோதரரும் தேனி மாவட்ட ஆவின் தலைவருமான ஓ.ராஜாவுக்கு கொரோனா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, மதுரை கே.கே நகரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஓ.ராஜாவிற்கு அறிகுறி இல்லாததால் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மருத்துவமனை எதிர்ப்புறம் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ஓ.ராஜாவிற்கு இன்று காலை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்