‘நாட்டுக்காக நகையை கழற்றி கொடுத்தாங்க அம்மா’!.. துணை முதல்வர் சொன்ன ‘வரலாற்று’ சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிரதமர் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார்.

‘நாட்டுக்காக நகையை கழற்றி கொடுத்தாங்க அம்மா’!.. துணை முதல்வர் சொன்ன ‘வரலாற்று’ சம்பவம்..!

இதில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘லடாக்கில் இந்திய-சீன எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியதற்காக பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இது மிகவும் சரியான மற்றும் அவசியமான கூட்டமாகும். லடாக்கின் எல்லையில், தேசத்துக்காக போராடி தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த 20 இந்திய வீரர்களுக்கு எனது வீர வணக்கத்தை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடினமான ஒரு நேரத்தில் பிரதமர் நாட்டை வழிநடத்திக்கொண்டிருக்கிறார். COVID-19 தொற்றுநோயை எதிர்கொண்டுள்ள நேரத்தில், தேசத்தை அமைதியாக வழிநடத்துகிற தலைமையினை ஏற்றுள்ள, பிரதமருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

முன் எப்போதும் இல்லாத நெருக்கடியாக COVID-19 நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நம் நாடு ஒருபக்கம் ஈடுபட்டிருக்கும்போது, மறு பக்கம் சீன தரப்பினரின் கடுமையான நடவடிக்கைகள் காரணமாக நாடு ஒரு புதிய சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது. நமது நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இந்திய அரசு மற்றும் நமது பாதுகாப்பு படைகளுக்கு பின்னால் தமிழகமும் மற்றும் அதிமுகவும் உறுதியாக நிற்கின்றன.

சமீபத்தில் இறந்த 20 ராணுவ வீரர்களில் ஒருவர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹவில்தார் கே.பழனி தமிழகத்தைச் சேர்ந்தவர். இந்த மாவட்டம் நம் நாட்டின் தென்முனைக்கு அருகில் உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான ஒவ்வொரு இந்தியரும் நாட்டைப் பாதுகாப்பார்கள், மிகச்சிறந்த தியாகம் செய்யத் தயாராக இருப்பார்கள் என்பதையே இவ்வீரரின் மறைவு சரியாக நிரூபிக்கிறது.

அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் போர் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக, அம்மா தனது சொந்த நகைகளை தாராளமாக நன்கொடையாக வழங்கியதை நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். இந்திய அரசு எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழு ஆதரவளிக்கிறோம். இந்த நெருக்கடியை எதிர்கொள்வதில் பாதுகாப்புத் துறை அமைச்சரும் மிகுந்த துணிச்சலுடன் செயல்பட்டுவருகிறார். இந்தக் கூட்டத்தை கூட்டி எங்கள் கருத்துக்களைத் கேட்டறிந்த பிரதமருக்கு நான் மீண்டும் நன்றி கூறுகிறேன்’ என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

மற்ற செய்திகள்