'அரபிக் கடலில் உருவாகும் புதிய புயல்'... 'எச்சரித்த வானிலை மையம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தென்மேற்கு பருவ மழை வலுப்பெற்றதை அடுத்து, அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

'அரபிக் கடலில் உருவாகும் புதிய புயல்'... 'எச்சரித்த வானிலை மையம்'!

சென்னை நுங்கம்பாக்கத்தில், வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது லட்சத்தீவு பகுதியை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் கிழக்கு மத்திய அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும் மாற வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்,  அப்பகுதிக்கு மீனவர்கள் 3 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டார். இந்தப் புயல், வடமேற்கு திசையில் குஜராத்தை நோக்கி நகரும் என்றும், இதனால் தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பில்லை என்றும் புவியரசன் விளக்கம் அளித்தார்.

அதே சமயம் தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

RAIN, CHENNAI, HEATWAVES