“நம்பவே முடியல.. நேர்ல வந்த மாதிரியே இருக்கு”.. கல்யாண மண்டபத்தில் நடந்த நெகிழ்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருக்கோவிலூர் அருகே இறந்த தந்தையின் மெழுகு சிலை முன்பு நடந்த மகளின் திருமணம் நடந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“நம்பவே முடியல.. நேர்ல வந்த மாதிரியே இருக்கு”.. கல்யாண மண்டபத்தில் நடந்த நெகிழ்ச்சி..!

Also Read | “இது ரெண்டுல மட்டும் தேறிட்டா நிச்சயம் சான்ஸ் கிடைக்கும்”.. அர்ஜூன் டெண்டுல்கர் குறித்த கேள்வி.. MI கோச் கொடுத்த விளக்கம்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தனகனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பத்மாவதி. இவருடைய கணவர் செல்வராஜ் (வயது 56). கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக செல்வராஜ் உயிரிழந்தார். இந்த நிலையில், செல்வராஜின் இளைய மகள் மகேஸ்வரிக்கும், திருக்கோவிலூரில் அச்சகம் வைத்து நடத்தி வரும் ஜெயராஜ் என்பவருக்கும் இன்று திருமணம் நடந்தது.

உயிருடன் இருக்கும் போது மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என செல்வராஜ் திட்டமிட்டிருந்த நிலையில், அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தந்தை மீது அதிக பாசம் கொண்ட மகேஸ்வரி தனது திருமணத்துக்கு தந்தை இல்லையே என சோகத்தில் இருந்துள்ளார்.

Daughter gets married in front of her father statue

தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில், செல்வராஜின் குடும்பத்தினர் ரூபாய்.5 லட்சம் செலவில் அவரின் மெழுகு சிலையை தயாரித்தனர். செல்வராஜுக்கு பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து அமர்ந்து இருப்பதுபோல் மெழுகுசிலை தத்ரூபமாக உருவாக்கினார்கள்.

இந்த சிலையை புரோகிதர்கள் முன் வைத்து திருமண சடங்குகள் நடந்தது. அப்போது பெற்றோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற மகேஸ்வரி, தந்தை செல்வராஜியின் மெழுகுசிலையை பார்த்து கண்ணீர் விட்டார். திருமணத்துக்கு வந்த உறவினர்கள், இதைப் பார்க்கும்போது சிலை மாதிரி தெரியவில்லை, செல்வராஜே நேரில் வந்தது போல் இருந்தது என நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Also Read | மாப்பிள்ளைக்கு 10 கண்டிஷன் போட்ட மணப்பெண்.. ‘அந்த 8-வது பாயிண்ட் வேறவெவல்’.. வைரலாகும் கல்யாண கட் அவுட்..!

DAUGHTER, MARRIED, FATHER, FATHER STATUE, மெழுகு சிலை, திருமணம்

மற்ற செய்திகள்