"அப்பவே நான் செத்துருக்கணும், 15 ஆளுங்கள செட் பண்ணி".. எல்லாத்துக்கும் அவ தான் காரணம்.. மறைவுக்கு முன் டான்சர் ரமேஷ் சொன்ன விஷயம்!!.. Throwback!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

டிக் டாக் மற்றும் சமூக வலைத்தளம் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆன டான்சர் ரமேஷ் உயிரிழந்து போனது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

"அப்பவே நான் செத்துருக்கணும், 15 ஆளுங்கள செட் பண்ணி".. எல்லாத்துக்கும் அவ தான் காரணம்.. மறைவுக்கு முன் டான்சர் ரமேஷ் சொன்ன விஷயம்!!.. Throwback!!

சென்னையை சேர்ந்த இவர், தெருக்களில் நடனமாடி அதன் மூலம் பிரபலம் அடைந்து பிரபல தனியார் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராகவும் களமிறங்கி இருந்தார்.

இதற்கடுத்து ஒரு படத்திலும் தோன்றி இருந்த ரமேஷ், திடீரென மரணம் அடைந்துள்ள நிலையில், அதற்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், தனது 2 ஆவது மனைவி குறித்து முன்பு டான்சர் ரமேஷ் பேசி உள்ள விஷயங்கள், தற்போது அவரது மரணத்திற்கு பிறகு வைரலாகி பலரது மத்தியில் அதிர வைத்துள்ளது.

அப்போது பேசிய ரமேஷ், "என்ன ஏதாவது பண்ணனும் சாகடிக்கணும்னு சொல்லி 15 பேர் ஆள வச்சாங்க. நான் நடக்கக்கூடாது, டான்ஸ் ஆடக்கூடாது" என தனது காலில் அடித்ததையும் குறிப்பிட்டு காண்பிக்கிறார். தொடர்ந்து பேசும் ரமேஷ், "நான் முன்னேறக்கூடாது, இப்ப ஃபேமஸ் ஆகுறேன்ல அது எதுவும் ஆகக்கூடாதுன்னு பிளான் பண்ணி என்னை சாகடிக்க திட்டம் போடுறாங்க. என் முதல் மனைவி சித்ராவுக்கும் அவங்களோட பொண்ணுக்கும் ஏதாவது ஆச்சுன்னா அவ தான் காரணம். 15 பேர மூணு இடத்தில பிரிச்சு கொலை பண்ண முயற்சி பண்ணாங்க. அப்பவே என் மனைவியும், பொண்ணுங்களும் என்ன எச்சரிச்சதால நான் தப்பிச்சேன், இல்லன்னா அன்னைக்கே இறந்து போயிருப்பேன்.

Dancer Ramesh throwback video about his second wife

என் 2 ஆவது மனைவி பேரு இன்பவள்ளி. அவங்களுக்கு மூணு பொண்ணுங்களும் இருக்காங்க. என்னோட டான்ஸ் பிடிக்கும்னு வந்தாங்க, நான் பரிதாபப்பட்டு சேர்த்துக்கிட்டேன். நான் பண்ண தப்புதான் அது, நான் கொஞ்சம் அவங்க கூட க்ளோஸ் ஆயிட்டேன். இந்த டிவி ஷூட்டிங் போகும்போது கூட்டிட்டு போக சொன்னாங்க. அங்க கூட்டிட்டு போய் பேச வச்சதும் அவங்க என் மனைவி மாதிரி ஆகிட்டாங்க. நான் கூட இல்லன்னு என் முதல் பொண்டாட்டி எதுவுமே பேசல.

எல்லாத்ததுக்கும் அவங்களையே கூட்டிட்டு போய் நான் தப்பு பண்ணிட்டேன். ஆனா அவங்க (2 ஆவது மனைவி, பொண்ணுங்க) என்ன ரொம்ப டார்ச்சர் பண்ணாங்க. நான் ஒன்னு சொல்றேன் கண்டிப்பா பப்ளிக் இதுக்கு நடவடிக்கை எடுப்பாங்க. என் மனைவி கூட வாழ கூடாதுன்னு தான் என்னை கொலை பண்ணனும்ன்னு அவங்களுக்கு ஆக்ரோஷம். ஆளுங்கள வெச்சு என்னை கொலை பண்றதுக்கு முயற்சி பண்ணா. 23 வருஷமா லவ் பண்ணி கட்டிக்கிட்டது சித்ராவை தான். இது நிறைய பேருக்கு தெரியும், நிறைய பேருக்கு தெரியாது" என தெரிவித்தார்.

Dancer Ramesh throwback video about his second wife

Image Credit : Zee Tamil

இரண்டாவது மனைவி குறித்து ரமேஷ் முன்பு பேசிய வீடியோக்கள், தற்போது அதிகம் பேசு பொருளாக மாறி உள்ளது.

DANCER RAMESH, THROWBACK

மற்ற செய்திகள்