அந்த அபிநய 'சரஸ்வதியே' தோற்றுவிடும் பாவனை... 'கலைத்தாயின்' மூத்த வாரிசு... ட்ரெண்டான 'டிக்டாக் தமிழன்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

டிக்டாக்-ல் "நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்" பாடலுக்கு கலைநயத்தோடு நவரசங்களையும் வெளிப்படுத்தி நடனமாடிய நடன கலைஞர் ஒருவர் இணையத்தில் அதிக பாராட்டுகளை பெற்று வருகின்றார்.

அந்த அபிநய 'சரஸ்வதியே' தோற்றுவிடும் பாவனை... 'கலைத்தாயின்' மூத்த வாரிசு... ட்ரெண்டான 'டிக்டாக் தமிழன்'...

தமிழ்த்தாய் வாழ்த்து அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டங்களில் பாடப்படுவது வழக்கம். இது தமிழ் மொழியை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும் பாடலாகும்.

மனோன்மணியம் பெ.சுந்தரனார்  எழுதிய இப்பாடலை தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த பாடலுக்கு நடன ஆசிரியர் ஒருவர், கலைநயத்தோடு நவரசங்களையும் முகத்தில் வெளிப்படுத்தி நடனமாடி வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ டிக்டாக்கில் அதிக பாராட்டுகளை பெற்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

DANCE TO COMPLIMENT, TIK TOK, VIRAL VIDEO