'ஒரு மெரட்டு மெரட்டிய நிவர் புயல்'.. “அடுத்து எந்த திசையை நோக்கி திரும்பியது?” - வானிலை மையம் அறிவித்த பரபரப்பு தகவல்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நிவர் புயல் கர்நாடகாவை நோக்கி நகர்ந்து வருவதால், வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகி, அதி தீவிர புயலாக மாறிய நிவர் புயல், நேற்றிரவு 10 மணி அளவில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கே தென்கிழக்கே சுமார் 55 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 130 கி.மீ. தொலைவிலும், கடலூருக்குத் தென்கிழக்கே சுமார் 80 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்து, அங்கிருந்து நகர்ந்து புதுவைக்கு வடக்கே, இரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 வரை முழுவதுமாக, 120 முதல் 135 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்தது.
பின்னர் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வலுவிழந்தது. இந்நிலையில் சூறவாளியாக மாறி வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்றதாகவும், தெரிவித்த இந்திய வானிலை ஆய்வு மையம், “கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல் தாக்கத்தால் வங்ககடல் அலையின் வேகம் அதிகமாக இருக்கும். காற்று வீசக்கூடும்.
இதனால் வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். சென்னையில் சற்று மழை பெய்யும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்