'வெளியேற்றப்படும் 1000 கன அடி நீர்'... 'செம்பரம்பாக்கத்தில் ஒரே நாளில் 20 செ.மீ வரை மழை'... வெளியான தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்செம்பரம்பாக்கத்தில் ஒரே நாளில் 15 முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என மத்திய ஜல்சக்தித் துறை தெரிவித்துள்ளது.
நிவர் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை அதிதீவிர புயலாகக் கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில் கடுமையான மழை பெய்து வருகிறது. சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் அளவு 22 அடியை எட்டிய நிலையில், முதல்கட்டமாக 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு ஏரி திறக்கப்பட நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செம்பரம்பாக்கத்தில் ஒரே நாளில் 15 முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என மத்திய ஜல்சக்தித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “செம்பரம்பாக்கம் பகுதியில் நாளை காலை 6 மணிக்குள் 15 முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 7 ஆயிரம் கன அடி நீர் வரத்து இருக்கும் என்பதால் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.” எனத் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்