அதி தீவிர புயலாக மாறும் ‘கியார்’... இந்திய வானிலை மையம் தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அரபிக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, தற்போது புயலாக உருவெடுத்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதி தீவிர புயலாக மாறும் ‘கியார்’... இந்திய வானிலை மையம் தகவல்!

அரபிக் கடலில் நிலைக் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை, வடக்கு நோக்கி நகர்ந்து புயலாக மாறியுள்ளது. இந்தப் புயலுக்கு கியார் (KYARR) எனவும் பெயரிடப்பட்டுள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த புயலானது, அடுத்த 24 மணி நேரத்தில், அதி தீவிர புயலாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலால் தமிழகத்திற்கு ஆபத்தில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, வலுவிழந்து விட்டதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த 2 நாட்களாக மழை குறைந்துள்ளது. எனினும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்ப நிலையாக 31 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசும் பதிவாக கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

RAIN, CHENNAI, IMD