‘அடுத்த 6 மணிநேரத்துக்கு கனமழை’.. வலுவிழந்த ‘புரெவி’ புயல்.. வானிலை மையம் முக்கிய தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புரெவி புயல் காரணமாக அடுத்த 6 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த புரெவி புயல் மன்னார் வளைகுடா பகுதி பாம்பனுக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த புரெவி புயல் ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 3 ஏற்றப்பட்டுள்ளது.
அடுத்த 6 மணிநேரத்துக்கு சென்னை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், காரைக்கால், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை உட்பட 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று (04.12.2020) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்