திரிகோணமலையில் கரையைக் கடந்தது! பாம்பனை நெருங்கும் புரெவி... காலை முதல் கொட்டித் தீர்க்கும் கனமழை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தெற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், புரெவி புயலாக வலுப்பெற்றது.
இந்த புயல், நேற்றிரவு இலங்கையின் திரிகோணமலைக்கு வடக்கே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், திரிகோணமலையில் கிழக்கு திசையில் 140 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து கிழக்கு - வடகிழக்கு திசையில் 550 கிலோ மீட்டர் தொலைவிலும் நேற்று மாலை புரெவி புயல் இருந்து மையம் கொண்டிருந்தது.
இதனால், நேற்று காலை முதல் பலத்த காற்றுடன் திரிகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மழை பெய்யது. கடலும் கொந்தளிப்பான நிலையில் காணப்பட்டது. இதனிடையே திரிகோணமலை அருகே புரெவி புயல் வானிலை மையம் கணித்தபடியே நேற்றிரவு கரையை கடந்தது.
தற்போது பாம்பனுக்கு 90 கி.மீ தொலைவில் இருந்து புரெவி புயலானது பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே மணிக்கு 12 கி.மீ தொலைவில் பாம்பனை நோக்கி நகர்ந்து கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்