தண்ணீரில் 'மிதக்கும்' கன்னியாகுமரி மாவட்டம்...! 'சூறைக்காற்றில் வேரோடு சாய்ந்த மரங்கள்...' - வெள்ள அபாய எச்சரிக்கை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சூறைக் காற்றுடன் பெய்த மழையால் நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல், கருங்கல், ஈத்தாமொழி, குலசேகரம், உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதோடு சாலையின் இருபுறமும் இருக்கும் மரங்களும் பரவலாக சாலையில் விழுந்துள்ளன

தண்ணீரில் 'மிதக்கும்' கன்னியாகுமரி மாவட்டம்...! 'சூறைக்காற்றில் வேரோடு சாய்ந்த மரங்கள்...' - வெள்ள அபாய எச்சரிக்கை...!

சாலையோர மரங்கள் சாய்வது காரணமாக ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டதுள்ளது. அதோடு தொடர் மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணையில் இருந்து 11,320 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு நாட்களாக கன்னியாகுமரியில் பெய்த மழையின் அளவு, கடந்த இரு ஆண்டுகளில் பெய்த மழையின் அதிகபட்ச அளவாக கணக்கிடப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் சராசரி மழை அளவு 139 மி.மீ. ஆக இருந்தது. அதிகபட்சமாக மைலாடியில் 236 மி.மீ. (23 செ.மீ.) மழை பெய்திருந்தது.

சாலைகளில், தெருக்களில் இருக்கு வாகனங்கள் அடித்து செல்வதுடன், 30க்கும் மேற்பட்ட வீடுகள் உடைந்து விழுந்துள்ளன என்ற செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.

நாகர்கோவில் அருகே புத்தேரி செங்குளத்தில் உடைப்பு ஏற்பட்டு மழை நீர் அங்குள்ள 40க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்தது. இதைப்போல் குளம் உடைப்பு ஏற்பட்டதில் அங்குள்ள சாலை துண்டிக்கப்பட்டதுள்ளது.

இதுவரை பூதப்பாண்டியில் 150 மி.மீ., சிற்றாறு ஒன்றில் 88, களியலில் 148, கன்னிமாரில் 154, பாலமோரில் 130, நாகர்கோவிலில் 144, கொட்டாரத்தில் 167, குழித்துறையில் 152, சிவலோகத்தில் 86, பேச்சிப்பாறையில் 122, பெருஞ்சாணியில் 127, புத்தன் அணையில் 126,  சுருளகோட்டில் 252, தக்கலையில் 96, குளச்சலில் 76, இரணியலில் 192, ஆனைகிடங்கில் 157, முள்ளங்கினாவிளையில் 138, கோழிப்போர்விளையில் 145, மாம்பழத்துறையாறில் 148, ஆரல்வாய்மொழியில் 104,  அடையாமடையில் 69, குருந்தன்கோட்டில் 138,   முக்கடல் அணையில் 96 மிமீ., மழை பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்