Thalaivi Other pages success

'இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கும்ன்னு நினைக்கல'... 'அதிர்ந்துபோன கிருத்திகா'... பப்ஜி மதன் வழக்கில் அதிரடி திருப்பம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவுக்கு எதிராக ஆயிரத்து 600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையைக் கடந்த ஆகஸ்டு மாதம் போலீசார் தாக்கல் செய்தனர்.

'இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கும்ன்னு நினைக்கல'... 'அதிர்ந்துபோன கிருத்திகா'... பப்ஜி மதன் வழக்கில் அதிரடி திருப்பம்!

பப்ஜி விளையாட்டின் மூலம் ஆபாசமாக பேசி வீடியோ பதிவிட்ட யூ-டியூபர் மதன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி கிருத்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் மதனிடம் இருந்த ஆடி கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

Cyber Crime police were given a copy of Chargesheet to Pubg Madan

ஆனால் அவரது மனைவி கிருத்திகா தங்களிடம் இருப்பது ஆடி கார் மட்டும் தான் என்றும், சொகுசு கார் கிடையாது என்றும் கூறி சர்ச்சையைக் கிளப்பினார். அதோடு கொரோனா காலத்தில் வேலை இழந்து கஷ்டப்படுவோருக்கு உதவுகிறோம் என்ற பெயரில் கோடிக் கணக்கில் மோசடி செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

Cyber Crime police were given a copy of Chargesheet to Pubg Madan

இந்நிலையில் 32 புகார்களின் அடிப்படையில் 32 சாட்சியங்களைக் கொண்டு யூ-டியூபர் மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவுக்கு எதிராக ஆயிரத்து 600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையைக் கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

Cyber Crime police were given a copy of Chargesheet to Pubg Madan

தற்போது வழக்கில் அதிரடி திருப்பமாகக் குற்றப்பத்திரிக்கை நகலானது மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவிடம் வழங்கப்பட்டுள்ளது. மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவுக்கு எதிராக ஆயிரத்து 600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Cyber Crime police were given a copy of Chargesheet to Pubg Madan

இதற்கிடையே குற்றப்பத்திரிக்கை நகலை வழங்குவதற்காக யூ-டியூபர் பப்ஜி மதன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது மனைவியும் நீதிமன்றத்தில் ஆஜரானார். இருவரிடம் குற்றப் பத்திரிகை நகலை நீதிமன்றம் வழங்கியது. வழக்கை எதிர்கொள்வதாக இருவரும் நீதிமன்றத்தில் தெரிவித்த பிறகு, வரும் 28ஆம் தேதி வழக்கு விசாரணை தொடங்கப்படும் என சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தது.

மற்ற செய்திகள்