"சபாஷ், பட்டையை கெளப்பிட்டீங்க.." அடுத்தடுத்து வந்த புகார்கள்.. West Bengal வரை சென்று அதிரடி காட்டிய 'போலீஸ்'
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஏராளமான செல்போன்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போன நிலையில், இது தொடர்பான விசாரித்து வந்த போலீசார், பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில், ஏராளமான செல் போன் திருடு போனதாக நிறைய புகார்கள் குவிந்து கிடந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, சுமார் 200 க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடு போனதாக, போலீசாருக்கு புகார் வந்ததால், உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்தனர்.
அதன் படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், காணாமல் போன செல் போன்களை கண்டுபிடித்து உரிய நபர்களிடம் ஒப்படைப்பதற்காக, தனது நேரடி கண்காணிப்பில் இருக்கும் சைபர் க்ரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, உத்தரவின் பெயரில் களத்தில் இறங்கிய சைபர் கிரைம் போலீசார், காணாமல் போன செல்போன்களின் IMEI நம்பர் கொண்டு, அவை எந்தெந்த பகுதியில் இயங்கி வருகிறது என்பதையும் கண்காணித்து வந்தனர். இதன் பின்னர், திருடிய நபர்களை அடையாளம் கண்டறிந்து, சுமார் 25 லட்சம் மதிப்பிலான 211 செல்போன்களையும் போலீசார் மீட்டனர். இந்நிலையில், செல்போனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, தக்கலை காவல் நிலையத்தில் நிகழ்ந்தது.
அப்போது பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத், மேற்கு வங்கம் வரை சென்று போலீசார் செல்போன்களை மீட்டதாக கூறினார். அதே போல, காவல் உதவி செயலியின் பயன்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்து அதனை பயன்படுத்தவும் கேட்டுக் கொண்டார்.
இது ஒரு பக்கம் இருக்க, காணாமல் போன செல் போன்களை மீட்ட போது, அதன் உறையில் இருந்த பணம் மற்றும் ஏடிஎம் கார்டுகளையும் கிரைம் போலீசார், முறையாக மீட்டுக் கொடுப்பதை கண்ட ஹரிகிரண் பிரசாத், சைபர் கிரைம் சப் இன்ஸ்பெக்டர் ஷம்சுதிர் என்பவரை பொது மக்கள் முன்னலையிலும் பாராட்டி உள்ளார்.
மற்ற செய்திகள்