'காசியின் செல்போன் காண்டாக்ட்ஸை பார்த்ததும்'.. ‘அதிர்ச்சியில் உறைந்து போய் நின்ற’ சைபர் க்ரைம் போலீஸார்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட காசியின் செல்போன் சோதனையிடப் பட்டதில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் தொடர்பு எண்கள் இருந்ததை பார்த்து சைபர் கிரைம் போலீஸார் அதிர்ந்துள்ளனர்.
சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களிடம் பழகி காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி பணம் பறித்த நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த காசி(28) கைது செய்யப்பட்டதை அடுத்து, கல்லூரி மாணவிகள், மருத்துவர், ஆசிரியை என பலரும் காசி மீது அளித்த புகாரின் பேரில், 7 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. பின்னர் குண்டர் சட்டத்தில் காசியை சிபிசிஐடி போலீஸார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அந்த சமயத்தில் காசியின் லேப்டாப்பில் இருந்து அவர் அழிக்க முயன்ற 800க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோ மற்றும் படங்களை சைபர் கிரைம் போலீஸார் மீட்டெடுத்தனர்.
அதில் பெண்களுடன் இருக்கும் படங்களும், மார்பிங் செய்யப்பட்ட படங்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் காசியிடம் கைப்பற்றப்பட்ட செல்போனில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடர்பு எண்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததையும் அதில் பாதிக்குப் பாதி எண்கள் பெண்களின் எண்களாக இருந்ததையும், இந்த தொடர்பு எண்களிடம், காசி வீடியோ கால் மூலம் பேசியிருப்பதுவும் கண்டு சைபர் கிரைம் போலீஸார் அதிர்ந்துள்ளனர்.
அத்துடன் அந்த தொடர்பு எண்களுக்கு சொந்தமான பெண்கள் பலரும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதே சமயம் பாதிக்கப்பட்ட மற்றும் புகார் அளித்த பெண்களின் முகவரி, விவரங்கள் உள்ளிட்ட பல ரகசியங்கள் காக்கப்படுவதாகவும், சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளதுடன், அப்பெண்களிடம் இருந்து முக்கிய ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்