என்னது.. கொத்து பரோட்டா இல்லையா? யாருக்கு வேணும் உங்க தோசை? கொதித்து போன கஸ்டமர்கள் செய்த அதிர்ச்சி காரியம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈரோடு: ரோட்டில் கொத்து பரோட்டா கேட்டு ஹோட்டல் உரிமையாளரின் மண்டை உடைந்த விவகாரத்தில் ஆயுதப்படை போலீசார் உள்பட மூன்று கைது செய்த காவல் துறையினர் அவர்களை சிறையில் அடைத்தனர்.
உணவு விரும்பிகள்:
தமிழர்களையும் உணவையும் பிரிக்க முடியாது. எங்கே எந்த மாதிரியான உணவுகள் கிடைக்கும், அங்கே ருசி எப்படி இருக்கும் என தெரிந்து வைத்திருப்பார்கள். அந்த உணவை உண்பதற்காக பல மைல்கல் தாண்டி போய் கூட உண்பவர்கள் உண்டு. அந்த அளவிற்கு நாவில் சுவை பற்றி விடும். அதுவும் தற்போது நகர்ப்புறங்களில் வீடுகளில் உணவு சமைப்பது குறைவாகி வருகிறது. விடுமுறை தினங்களில் சொல்லவே வேண்டாம். ஹோட்டல்களில் ஈ நுழையாத அளவிற்கு கூட்டம் நிரம்பி வழியும்.
எனவே குறிப்பிட்ட நேரங்களில் உணவை வாங்கி செல்வது வாடிக்கையாளர்களுக்கு பெரும் போராட்டமாஹா இருக்கும். அந்த நேரங்களில் அஜாக்கிரதையாக பல சம்பவங்களும் நடைபெறுவதுண்டு. கூட்டம் அதிகமாக இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட உணவு சீக்கிரம் காலி ஆகி விடும். அப்போது அந்த உணவை உன்வதற்கு வந்தவர்கள் ஏமாற்றம் அடைவார்கள். அது தகராறில் முடிந்த கதைகள் அநேகம். அப்படி ஒரு சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது.
கொத்து பரோட்டா வேண்டும்:
ஈரோடு வில்லரசம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ஈஸ்வரன். இவர், அந்த பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு உணவகத்திற்கு வந்த இருவர் கொத்து பரோட்டோ கேட்டுள்ளனர். அதற்கு தோசை மட்டும்தான் உள்ளது என ஹோட்டல் மாஸ்டர் கூறியுள்ளார்.
அதிரடி சண்டை:
இந்த நிலையில், ஒருவர் தான் போலீசாரின் தம்பி எனக்கூறி மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் ஆயுதப்படை காவலர் உமர் பாருக்கை அழைத்து ஆஷிக் தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர் உமர் பாருக் ஹோட்டல் உரிமையாளருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சண்டையில், காவலர் தாக்கியதில் உரிமையாளர் ஈஸ்வரனின் மண்டை உடைந்துள்ளது. தகவலை கேள்விப்பட்ட சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதில் உரிமையாளர் ஈஸ்வரன் அளித்த புகாரில் பேரில் ஆயுதப்படை காவலர் உள்பட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மற்ற செய்திகள்