'சாவியை கையில கொடுக்குறத...' 'பார்த்தது மட்டும் தான் தற்செயல்...' - ஆனா அதுக்கப்புறம் நடத்தினது எல்லாமே பக்கா ப்ளான்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடலூரில் தன் மகன் வீட்டுக்கு போவதை போன்னில் சொன்னதை கேட்ட கொள்ளையர்கள் அவர்கள் வீட்டுக்கு சென்று கைவரிசையை காட்டியுள்ளனர்.

'சாவியை கையில கொடுக்குறத...' 'பார்த்தது மட்டும் தான் தற்செயல்...' - ஆனா அதுக்கப்புறம் நடத்தினது எல்லாமே பக்கா ப்ளான்...!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ராமாபுரம் கிராமத்தில் உள்ள லாஸ்பேட்டையில் வசிப்பவர் சின்னப்பராஜ். தலைமையாசிரியான இவருக்கு சகாயராணி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

சின்னப்பராஜ் மற்றும் சகாயராணி திருமணமாகி சென்னையில் உள்ள தன் மகன் வீட்டுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த 20ஆம் தேதி சென்னைக்கும் கிளம்பியுள்ளனர். அப்போது ஓட்டலில் சாப்பிட சென்ற தம்பதிகள், தன் உறவினரிடம் போனில் பேசும்போது தாங்கள் சென்னைக்கு செல்வதாகவும், திரும்பி வர 3நாட்களுக்கு மேல் ஆகுமெனவும் கூறியுள்ளனர்.

துரதிஷ்ட்ட வசமாக இவர்கள் பேசுவதையும், சாவியை கொடுப்பதையும் தற்செயலாகக் கொள்ளையர்கள் கவனித்தனர். இருவர் சேர்ந்து  சின்னப்பராஜ் மற்றும் சகாயராணி அவர்களின் வீட்டிற்கு சென்று 50 பவுன் நகைகள், பணம் மற்றும் பித்தளை பொருட்களை திருடியுள்ளனனர்.

3 நாட்கள் கழித்து கடந்த 23ஆம் தேதி சின்னப்பராஜ் மற்றும் சகாயராணி தன் வீட்டிற்கு வந்து பார்க்கையில் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பொருட்களும் சிதறிக்கிடந்துள்ளனர். உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரில் காவல்துறையினரும் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடிவந்தனர்.

இந்நிலையில் சந்தேகத்திற்கு இடமான  முறையில் அப்பகுதியில் சுற்றிதிரிந்த இருவரை விசாரிக்கையில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனர். அதையடுத்து இருவரையும் காவல் நிலையத்தில் விசாரிக்கும் போது  தலைமை ஆசிரியர் வீட்டில் திருடிய கொள்ளையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் இந்த கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில்குமார் மற்றும்  சஜீவ் ஆகியோர் மீது இதற்கு முன்பே குற்றவழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்