நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சாவி தொலைஞ்சு போச்சு.. எங்க போச்சுன்னே தெரியல.. தாமதமான வாக்கு எண்ணிக்கை

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவிலில் சாவி இல்லாததால் தபால் ஓட்டு பெட்டி உடைக்கப்பட்டு வாக்கு எண்ணப்படுகின்றன. பேரூராட்சிக்கான தபால் பெட்டியின் சாவி காணாமல் போனதால் பூட்டு உடைக்கப்பட்டது. இதனால் அந்த மையம் சற்று பரபரப்பாக காணப்பட்டது. வாக்கு எண்ணிக்கையும் சற்று தாமதமாக தொடங்கியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சாவி தொலைஞ்சு போச்சு.. எங்க போச்சுன்னே தெரியல.. தாமதமான வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணும் மையத்தின் சாவி தொலைந்தது:

கடலூர் வளனார் பள்ளி வாக்கு மையத்தின் சாவியை அதிகாரிகள் தொலைத்தனர். இதனால் பூட்டு திறக்க முடியாமல், வாக்கு பதிவு இயந்திரங்களை எடுக்க முடியவில்லை.அறை இன்னும் பூட்டப்பட்டே உள்ளது. எனவே வேட்பாளர்களும் மக்களும் வெளியே காத்துக் கிடக்கின்றனர்.

பின்னர் இரும்பை அறுக்கும் பிளேடினால் பூட்டை அறுக்க தொடங்கினர். சிறிது நேரம் அறுத்த பிறகு பூட்டை உடைத்து அறையை திறந்துள்ளனர். இதனால் தாமதமாக எண்ணும் பணி தொடங்கியுள்ளது.

KEYS, CUDDALORE, சாவி

மற்ற செய்திகள்