'சார்...' 'ஸ்கூல் பசங்க எல்லாம் சைக்கிள்ள' 'முந்திட்டு போறாங்க...' 'ஊர்ந்து' செல்லும் 'அரசு பேருந்துகள்...' 'இப்படி கூட ஒரு காரணமா?...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரசு போக்குவரத்து, கோவை கோட்டம், ஈரோடு மண்டலத்தில், 1,300 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் 1 லிட்டர் டீசலில், 5.5 கி.மீ., துாரம் இயக்கி வந்த நிலையில், தற்போது 6 கி.மீ., தூரத்திற்கு இயக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து, போக்குவரத்து துணை பொது மேலாளர், பணிமனை அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், "ஜூன் முதல், ஈரோடு மண்டல பேருந்துகளின் வருமானத்தை அதிகரிக்க, 1 லிட்டர் டீசலுக்கு, 6 கி.மீ., துாரம் இயக்க வேண்டும்.
இதில் குறைவு ஏற்பட்டால், அந்தந்த பணிமனை கிளை மேலாளர், துணை கிளை மேலாளர், எரிபொருள் நிரப்பும் பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் டீசலுக்கு, அவர்களே கட்டணத்தை செலுத்த வேண்டும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, டீசலை சேமிக்க, பேருந்துகளை, டிரைவர்கள் குறைந்த வேகத்தில் ஓட்டி வருகின்றனர். இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர். ஈரோடு மண்டல உத்தரவை மேற்கோள் காட்டி, பிற மண்டல அதிகாரிகளும், டீசல் சிக்கனத்தை கடைப்பிடிக்க நிர்பந்தம் செய்வதால், அரசு பேருந்துகள் ஒரு வாரமாக ஆமை வேகத்திலேயே இயக்கப்படுகின்றன.
மற்ற செய்திகள்