முதல்வர் கைகளால் "தகைசால் தமிழர் விருது" பெற்ற தோழர் நல்லகண்ணு.! விருது பெற்ற கையோடு சுதந்திர தின மேடையிலேயே கொடுத்த சர்ப்ரைஸ்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் விதமாக, ‘தகைசால் தமிழர்’ என்ற விருது கடந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் ‘தகைசால் தமிழர்’ விருது பெறும் நபர்களுக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், சுதந்திர தின விழாவின்போது, முதலமைச்சரின் கையால் வழங்கப்படும்.
கடந்த ஆண்டிற்கான‘தகைசால் தமிழர்’ விருதை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் சங்கரய்யா பெற்றார். அரசு வழங்கிய ரூ.10 லட்சத்தை கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசுக்கே வழங்குவதாக சங்கரய்யா அறிவித்தார். இந்நிலையில், சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.
இதை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான ஆர். நல்லகண்ணுவுக்கு வழங்கப்பட்டது. 10 லட்ச ரூபாய் விருது பெற்ற மேடையிலேயே, அத்துடன் ரூ.5000 சேர்த்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்து 5 ஆயிரமாக திருப்பி வழங்கியதற்காக "தகைசால் தமிழர்" நல்லகண்ணுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்