சென்னையில் 'வேப்பிலை'க்கு ஏற்பட்ட திடீர் கிராக்கி... தேடித்தேடி 'பறித்து' செல்லும் மக்கள்... என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து கொரோனா அதிகம் பரவும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் வரும் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் 'வேப்பிலை'க்கு ஏற்பட்ட திடீர் கிராக்கி... தேடித்தேடி 'பறித்து' செல்லும் மக்கள்... என்ன காரணம்?

இதற்கிடையில் கொரோனாவால் சென்னையில் வேப்பிலைக்கு திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது. சென்னை பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் வேப்பிலையை சொருகி வைக்க ஆரம்பித்துள்ளனர். மேலும் வேப்பிலை சாறு கலந்த மஞ்சள் நீரை வீட்டை சுற்றிலும் தெளிக்க ஆரம்பித்து இருக்கின்றனர்.

வீடுகளுக்கு அருகில் வேப்பமரம் இல்லாதவர்கள் இருக்கும் இடங்களை தேடிச்சென்று பறித்து வருகின்றனர். இதுதவிர வெளியில் செல்லும்போதும் பைகளில் வேப்பிலையை போட்டு எடுத்து செல்கின்றனர். இப்படி பல்வேறு வழிகளிலும் சென்னைவாசிகள் வேப்பிலையை அதிகளவில் பயன்படுத்தி வருவதால், வேப்பிலை  தற்போது இன்றியமையாத பொருளாக மாறியுள்ளது.

மற்ற செய்திகள்