'சென்னை'க்கே போய்டலாம்... பிளைட்ல 'ரிட்டர்ன்' டிக்கெட் போட்டு... மூட்டை,முடிச்சோடு 'திரும்பி' வரும் மக்கள்... என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா காரணமாக சென்னையை காலி செய்து சொந்த ஊர் சென்ற மக்கள் தற்போது மீண்டும் திரும்ப ஆரம்பித்து இருக்கின்றனர்.

'சென்னை'க்கே போய்டலாம்... பிளைட்ல 'ரிட்டர்ன்' டிக்கெட் போட்டு... மூட்டை,முடிச்சோடு 'திரும்பி' வரும் மக்கள்... என்ன காரணம்?

கொரோனா தொற்று சென்னையில் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியதால் கடந்த சில மாதங்களாக சென்னையை காலி செய்து மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்றனர். பெரும்பான்மை போக்குவரத்து இல்லாத நிலையிலும் மக்கள் சொந்த ஊர் செல்வதை நிறுத்தவில்லை.

இந்த நிலையில் பிற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தற்போது மீண்டும் சென்னை திரும்ப ஆரம்பித்து இருக்கின்றனர். பேருந்து போக்குவரத்து இன்னும் தொடங்காத நிலையில் விமானங்கள் வழியாக சென்னை திரும்பும் மக்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

10 நாட்களுக்கு முன்புவரை 1,500-ஆக இருந்த சென்னைக்கு வருவோர் எண்ணிக்கை தற்போது 2,500-ஐ நெருங்கியுள்ளது. நேற்று 2,300 பேர் சென்னை வந்திறங்கிய நிலையில், இன்று 2, 450 பேர் சென்னை வர முன்பதிவு செய்துள்ளனர்.

பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்ததும், சென்னையில் தற்போது கொரோனா கட்டுக்குள் வர ஆரம்பித்து  இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் விரைவில் சென்னை முழுவதும் கொரோனா கட்டுக்குள் வந்துவிடும் என்ற நம்பிக்கை தற்போது துளிர்விட ஆரம்பித்து இருக்கிறது.

மற்ற செய்திகள்