இன்று 67 வயதான முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொரோனாவில் இருந்து மீண்டு பச்சை மண்டலத்துக்குள் நுழைந்த நீலகிரி மாவட்டத்தில் கொரோனா மீண்டும் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. தற்போது வரை அங்கு 107 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 33 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர்.
இந்த நிலையில் 67 வயதான முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார். கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்தார். இதன் மூலம் நீலகிரி மாவட்டம் முதல்முறையாக கொரோனா உயிரிழப்பை பதிவு செய்துள்ளது.
மற்ற செய்திகள்