கொரோனாவால் 'பாதிக்கப்பட்டவர்' குணமடைந்ததை... எப்படி 'உறுதி' செய்வது?... மருத்துவர்கள் விளக்கம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து குணமடைந்து வந்ததை எப்படி உறுதி செய்து கொள்வது? என மருத்துவர்கள் தற்போது விளக்கம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை மருத்துவர்கள், ''கொரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களுக்கு முதலில் ரத்த மாதிரிகள் எடுக்கப்படுகிறது. அவை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டு அதில் கொரோனா தொற்று உறுதியானால் மட்டுமே அவர்கள் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு 14 நாட்கள் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த சிகிச்சையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகாவிட்டாலும் (நெகட்டிவ்) அவரை உடனடியாக வீட்டுக்கு அனுப்புவதில்லை.
2 நாட்கள் கழித்து அவருக்கு மீண்டும் ரத்த பரிசோதனை செய்யப்படும். அதிலும் அவருக்கு உறுதியாகவில்லை (நெகட்டிவ்) என்றால் மட்டுமே அவர் வீட்டுக்கு அனுப்பப்படுவார். எனவே ஒருவருக்கு 2 முறை நடத்தும் பரிசோதனையின்போது உறுதியில்லை என்று தெரியவந்தால் மட்டுமே அவர் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார். வீட்டுக்கு சென்றாலும் அவர் 28 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டு தான் இருக்க வேண்டும்,'' என தெரிவித்து இருக்கின்றனர்.