'நீங்க பண்ணதுக்கு, நல்லா தண்ணிய போட்டு.. தொடைங்க'.. 'மதுரை' கோர்ட் கொடுத்த 'வினோத' தண்டனை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விருதுநகர் அருகே, அருப்புக் கோட்டையில் மாணவர்கள் 8 பேர் மது அருந்திவிட்டு கல்லூரிக்கு சென்றுள்ளனர். இதனால் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் வித்தியாசமான தண்டனை பரபரப்பாகி வருகிறது.

'நீங்க பண்ணதுக்கு, நல்லா தண்ணிய போட்டு.. தொடைங்க'.. 'மதுரை' கோர்ட் கொடுத்த 'வினோத' தண்டனை!

மேற்கண்டவாறு, அருப்புக் கோட்டை கல்லூரி மாணவர்கள் 8 பேர் மது அருந்துவிட்டு கல்லூரிக்குச் சென்றதால், அவர்கள் வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தாங்கள் அதற்கான கட்டணத்தை செலுத்தத் தயாராக உள்ளதாகவும், அதனால் அந்த கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு தங்களை கல்லூரிக்குள் நுழைய கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிடுமாறு உயர்நீதிமன்றத்திடம் மாணவர்கள் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த பிறகு, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை காமராஜர் இல்லத்தை சுத்தம் செய்வதோடு, மது அருந்துவதற்கு எதிராக விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பொதுமக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும் என வினோத உத்தரவை நீதிபதி சுரேஷ்குமார் பிறப்பித்தார்.

அதன்படி காவல் ஆய்வாளர், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் மாணவர்கள் காமராஜர் அரங்கத்தை சுத்தம் செய்தனர்.

MADURAI, COURT, PUNISHMENT, DRUNK