மதுரை எய்ம்ஸ் மருத்துவனை எப்போது கட்டி முடிக்கப்படும்?.. நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்த பரபரப்பு அறிக்கை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும் என்பது குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவனை எப்போது கட்டி முடிக்கப்படும்?.. நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்த பரபரப்பு அறிக்கை..!

மதுரையை சேர்ந்த K.K.ரமேஷ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், "மதுரை தோப்பூரில், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவனை கட்ட அடிக்கல் நடத்தப்பட்டது. அதன்பின்னர் பணிகள் நடைபெறவில்லை. ஆகவே, மத்திய அரசு இதற்கு உரிய நிதியை ஒதுக்கி, பணியை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி மனுதாக்கல் செய்திருந்தேன். இந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு 36 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவனையை கட்டி முடிப்பதாக தெரிவித்திருந்தது. ஆனால், இந்நேரம் வரை பணிகள் நடைபெறவில்லை. ஆகவே, நீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

Court orders to submit report on Madurai AIIMS Project

இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து முடிவெடுப்பதற்காக நீதிபதிகள் ரமேஷ் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை பணிக்காக ரூ 1977 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை கட்டி முடிக்க 5 வருடங்கள் 8 மாதங்கள் (2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்) ஆகும் எனவும் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

மேலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனர் மற்றும் துணை நிர்வாக இயக்குனர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஆகவே, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கூடாது எனவும் மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

Court orders to submit report on Madurai AIIMS Project

இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும் என்பது குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

MADURAI, AIIMS, HOSPITAL

மற்ற செய்திகள்