BGM Shortfilms 2019

‘விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய தம்பதி..’ களத்தில் இறங்கிய ‘அமைச்சரின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்..’

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுக்கோட்டையில் விபத்தில் காயமடைந்த தம்பதிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி அளித்து தனது பாதுகாப்பு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

‘விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய தம்பதி..’ களத்தில் இறங்கிய ‘அமைச்சரின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்..’

புதுக்கோட்டையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர் திரும்பி சென்னை செல்வதற்காக விமான நிலையத்துக்கு பாதுகாப்பு வாகனங்களுடன் காரில் சென்றுள்ளார். அப்போது கீரனூர் அருகே சாலை விபத்தில் சிக்கி ஒரு தம்பதி உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளனர். அதில் கணவருக்கு கையில் மட்டும் காயம் ஏற்பட, மனைவிக்கு மூக்கிலிருந்து இரத்தம் வந்துகொண்டே இருந்துள்ளது.

இதைப் பார்த்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக காரை நிறுத்தி இறங்கிச் சென்று அவர்களுக்கு முதலுதவி அளித்துள்ளார். பின்னர் 108 ஆம்புலன்ஸுக்காக காத்திருக்காமல் தனது பாதுகாப்பு வாகனத்திலேயே அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் கீரனூர் அரசு மருத்துவமனைக்கு தகவல் கொடுத்து உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்துள்ளார். அமைச்சரின் செயலுக்கு அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

MINISTER, VIJAYABASKAR, FIRSTAID, ACCIDENT, HELP