‘E-Pass கிடைக்கல பாஸ்’!.. கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கும், கேரளா பெண்ணுக்கும் நடந்த ‘சுவாரஸ்ய’ கல்யாணம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இ-பாஸ் கிடைக்காததால் கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கும், கேரள பெண்ணுக்கும் இரு மாநில எல்லையில் எளிமையாக திருமணம் நடந்தது.

கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்த ரோபின்சனுக்கும், கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த பிரியங்காவுக்கும் மார்ச் 22ம் தேது திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் குறிப்பிட்ட தேதியில் திருமணம் நடைபெறவில்லை. இதனை அடுத்து ஜூன் 7ம் தேதி திருமணம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
இதற்காக மணமகனும், மணமகளும் தனித்தனியே இடுக்கி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஆன்லைனில் இ-பாஸ் விண்ணப்பித்தனர். இதில் மணமகளுக்கு இரு மாநிலங்களில் இருந்தும் இ-பாஸ் கிடைத்துவிட்டது. ஆனால் மணமகனுக்கு இடுக்கி மாவட்டத்தில் இ-பாஸ் கிடைக்கவில்லை.
இதனால் தமிழக-கேரள எல்லையில் திருமணத்தை முடிக்க இருவீட்டாரும் முடிவு செய்தனர். அதன்படி இரு மாநில எல்லையில் பாய் விரித்து, தாம்பூலங்கள் மாற்றி திருமண சடங்குகளை செய்தனர். பெற்றோர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்த திருமணத்தில் கேரள போலீசார், சுங்கத்துறையினர், சுகாதாரத்துறையினர், வனத்துறையினர் உள்ளிட்டோர் வந்து மணமக்களை வாழ்த்தினர். மணமகளுக்கு கோவை மாவட்ட இ-பாஸ் உள்ளதால் அவர் மணமகனுடன் கோவை கிளம்பினார்.
மற்ற செய்திகள்