'நாளை' முதல்... 'அத்தியாவசிய' பொருட்கள் 'விற்பனை' நேரம் 'குறைப்பு'... முதலமைச்சர் பழனிசாமி 'அறிவிப்பு'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாளை முதல் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் செயல்படும் நேரத்தை குறைத்து  முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

'நாளை' முதல்... 'அத்தியாவசிய' பொருட்கள் 'விற்பனை' நேரம் 'குறைப்பு'... முதலமைச்சர் பழனிசாமி 'அறிவிப்பு'...

இதுகுறித்து முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அரசு தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இருப்பினும் ஊரடங்கு உத்தரவை மீறி சிலர் அலட்சியமாக நடந்துகொள்வதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நாளை முதல் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இதை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்குதில் அரசுடன் சமூக ஆர்வலர்களும் இணைந்து செயல்படலாம். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.