'அவசரகால' பயணத்திற்கு 'பாஸ்' வழங்குவதில் 'மாற்றம்'... வெளியாகியுள்ள 'புதிய' அறிவிப்பு...
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொதுமக்களின் அவசரகால பயணத்திற்கு வட்டாட்சியர், மாநகராட்சி துணை ஆணையர் பாஸ் வழங்கலாம் என்ற நடைமுறை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் திருமணம், மருத்துவம், இறப்பு போன்ற அவசரகால பயணங்களுக்காக மட்டும் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் அவசர பயணத்திற்கு வட்டாட்சியர், மாநகராட்சி துணை ஆணையர் பாஸ் வழங்கலாம் என்ற நடைமுறை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் மட்டுமே பாஸ் வழங்கலாம் என்ற பழைய நடைமுறையே தொடரும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் சாலைக்கு வருவது அதிகரித்திருப்பதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CORONAVIRUS, LOCKDOWN, TRAVEL, PASS, TN, EMERGENCY