கொரோனா எதிரொலி: இந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படுகிறதா?குழுத் தலைவர் அதிரடி பதில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடக்கிறது.

கொரோனா எதிரொலி: இந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படுகிறதா?குழுத் தலைவர் அதிரடி பதில்!

ஆனால் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இம்முறை ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் அல்லது தள்ளிவைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியானதை அடுத்து, இந்தத் தகவலுக்கு இப்போட்டி அமைப்பு குழுத் தலைவர் யோஷிரோ மோரி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பேசிய யோஷிரோ மோரி, டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியினை ரத்து செய்வது குறித்தோ, அதனை தள்ளிப்போடுவது குறித்தோ இன்னும் பரிசீலனை செய்யவில்லை என்பதை தெள்ளத் தெளிவாக தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

OLYMPIC2020, CORONA