'கொத்துக்கொத்தாக' விமானத்தில் பயணம் செய்து... 'வாழவைத்த' நகரத்தை விட்டு வெளியேறும் மக்கள்... இவ்ளோ மோசமான நெலமையா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனாவால் சென்னை நகரத்தை விட்டு வெளியேறும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உலகளவில் சிறந்த நகரங்களில் ஒன்றாக விளங்கும் சென்னையின் நிலைமை தற்போது மிகவும் மோசமாக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா ஹாட் ஸ்பாட்டாக சென்னை மாறியுள்ளது. ஒரு காலத்தில் சென்னைக்கு வந்து விட்டால் ஏதாவது ஒரு வேலை செய்து பிழைத்து கொள்ளலாம் என கொத்துக்கொத்தாக மக்கள் படையெடுத்து வந்தது மாறி, இன்று விட்டால் போதும் என்று சென்னையை விட்டு வெளியேற மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தரைவழி பயணங்களுக்கு மிகுந்த கட்டுப்பாடுகள் இருப்பதால் விமானத்தில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் 490 விமானங்கள் சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு புறப்பட்டு சென்றன. இதில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சென்று உள்ளனர். அதேபோல் பிற நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த விமானங்களில் 33 ஆயிரம் பேர் வந்து உள்ளனர்.
சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. குறிப்பாக கொல்கத்தா, கவுகாத்தி, ஐதராபாத், திருவனந்தபுரம், பெங்களூர் போன்ற விமானங்களில் அதிகமான பயணிகள் செல்கின்றனர். வந்தாரை வாழவைத்த சென்னையை விட்டு மக்கள் வெளியேறுவது வருத்தமளித்தாலும் இந்தநிலை மாறி சென்னை தன்னுடைய இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்பும். அந்த காலம் வரும்வரை நாம் காத்திருப்போம்!
மற்ற செய்திகள்