'அலட்சியமா சுத்தாதீங்க'... 'ஊரடங்கு உத்தரவை மீறினால் என்ன நடவடிக்கை'?... சென்னை காவல்துறை அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் நடமாடினால், என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து சென்னை மாநகர காவல்துறை விளக்கமளித்துள்ளது.

'அலட்சியமா சுத்தாதீங்க'... 'ஊரடங்கு உத்தரவை மீறினால் என்ன நடவடிக்கை'?... சென்னை காவல்துறை அதிரடி!

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதை தடுக்க,  மக்கள் வெளியில் கூடாமல் இருப்பதை தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி நேற்று பிறப்பித்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் நேற்று மாலையில் இருந்தே கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை மாநகரில் கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கிடையே சென்னை மாநகர சாலைகளில் தேவையில்லாமல் நடமாடுபவர்களை பிடிக்க அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 135 போலீஸ் நிலையங்களிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்திலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன, போலீசார் வாகனங்களில் ரோந்து சுற்றி வருகிறார்கள். மேலும் சாலையில் யாராவது தென்பட்டால் அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கிறார்கள்.

இதற்கிடையே ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்தால், 1897-ம் ஆண்டு தொற்று நோய்கள் சட்டம், மற்றும் 1860-ம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டம், 188 பிரிவின் கீழ் தண்டிக்கப்படக்கூடும். அதன்படி  ஒரு நபர் ஆறு மாதங்கள் வரை சிறை வாசம் அனுபவிக்க நேரிடும் அல்லது ரூ.1000 அபராதம், சிறை இரண்டும் விதிக்கப்படும்.

POLICE, TAMILNADUPOLICE, CHENNAI CITY POLICE, CORONAVIRUS LOCKDOWN