நடுவுல வந்த ஞாயிற்றுக்கிழமை.. மண்டகாயும் மதுப்பிரியர்கள்.. டாஸ்மாக்கும் லீவு நாட்களும்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்தியாவில் கொரோனாவின் அச்சுறுத்தல் மீண்டும் மக்களை பீதியடைய வைத்துள்ளது. இதனிடையே தமிழகத்தில் பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து வரவிருக்கின்ற பொங்கல் தித்திப்பாக அமையுமா? எனக் கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை விடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

நடுவுல வந்த ஞாயிற்றுக்கிழமை.. மண்டகாயும் மதுப்பிரியர்கள்.. டாஸ்மாக்கும் லீவு நாட்களும்

விஸ்வரூபமெடுக்கும் கொரோனா

தமிழகத்தில் நேற்று மட்டும் 7 ஆயிரம் புதிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் கொரோனா பரவல் விஸ்வரூபமெடுக்கத் துவங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, பொழுதுபோக்கு இடங்களுக்குத் தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை  தமிழக அரசு விதித்திருக்கிறது.

Coronavirus Infections : TASMAC closed 5 fays in Tamilnadu

டாஸ்மாக் மூடல்

கொரோனா காரணமாக கட்டுப்பாடுகள் அதிகரித்துவரும் நிலையில் தற்போது தமிழகத்தில் 5 நாட்கள் டாஸ்மாக் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘டாஸ்மாக்’ மேலாண்மை இயக்குனர், அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ஜனவரி 15-ந்தேதி திருவள்ளுவர் தினம், 18-ந்தேதி வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு தினம், 26-ந்தேதி குடியரசு தினம் என்பதால், மேற்கண்ட நாட்கள் மதுபானம் விற்பனையில்லா தினங்களாக அனுசரிக்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Coronavirus Infections : TASMAC closed 5 fays in Tamilnadu

இதையொட்டி மேற்கண்ட நாட்களில் அனைத்து மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற ‘பார்’களை கடை மேற்பார்வையாளர்கள் பூட்டி ‘சீல்’ வைக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வருகிற 9 மற்றும் 16 ஆம் தேதி  ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. எனவே அப்போது ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் அடைக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் இந்த மாதத்தில் 5 நாட்கள் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் அடைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

CORONA, TASMAC, கொரோனா, டாஸ்மாக்

மற்ற செய்திகள்